homosexual open talk for two famous actress
பாலிவுட்டில் எப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகைகள் சோனம் கபூர் மற்றும் ஆலியா பட். இவர்கள் இருவரும் ட்விட்டரில் ஓரின செயற்கை குறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இது குறித்துப் பேசத் துவங்கியதன் காரணம்... டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் பேசிய குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் ஒரு மாணவர் ஓரின சேர்க்கையாளரான தன்னை மற்றவர்கள் தவறாக நடத்துவதைத் தவிர்ப்பது எப்படி என ஒரு கேள்வியை முன்வைத்துளார்.
அதற்கு "நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள், அப்போது தான் உங்களால் எதிர்த்து நிற்க முடியும். மேலும் இது நிரந்தரமான ஒன்று அல்ல. சிலர் ஆரம்பத்தில் ஓரினசேர்க்கையாளராக இருந்து பின்னர் மாறியுள்ளதை நான் பார்த்துள்ளேன்," என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர் "ஓரினச் சேர்க்கை என்பது பிறக்கும்போதே வருவது அது மாறாது" என ட்விட்டரில் கூறியுள்ளார்.
அதே போல ஆலியா பட்டும் சோனம் கபூருக்கு ஆதரவாக டிவிட்டர் போட்டு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
