ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், திருமணம் செய்த நான்கே நாட்களில் காதலியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் இல்லற வாழ்க்கை பற்றி புரிந்து கொள்ள சில காலம் எடுக்கும். காதலிக்கும் போது இருந்தது போலவே திருமணத்திற்கு பின்பும் சிலர் இருப்பதில்லை. அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் அவர்களை மாற்றிவிடும். அதே போல்  பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால் கூடுதலாகவே நாட்கள் தேவைப்படும் ஒருவரை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள.

ஆனால் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால், உலகம் வேகமாக இயங்குவது போலவே... திருமணம் செய்த கையேடு விவாகரத்தையும் பெற்றுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்.

55 வயதாகும் இவர், சினிமா துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர். அவர் ரைசிங் அரிசோனா , தி ராக் , ஃபேஸ் ஆப் , கான் இன் 60 செகன்ட்ஸ் , நேஷனல் டிரஷர் , கோஸ்ட் ரைடர்  என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

இவர், 1995 ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை Patricia Arquette என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக 6 வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இவரை தொடர்ந்து, 2002 ஆண்டு பிரபல பாடகி Lisa Marie Presley என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமண பந்தமும் இரண்டே ஆண்டுகளில், விவாகரத்தை நோக்கி சென்றது. இவரை தொடர்ந்து அதே அதே ஆண்டில் Alice கிம் என்பவரை திருமணம் செய்தார். 12 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2016 ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

பின் மீண்டும் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், நான்காவதாக மேக்அப் கலைஞர், Erika Koike  என்பவரை 2019 ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தார். அனால் என்ன நடந்தது என தெரியவில்லை திருமணம் ஆன நான்கே நாட்களில் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இது ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தற்போது நிக்கோலஸ் கேஜ்ஜிடம், ஜீவனாம்சம் கேட்டு அவருடைய நான்காவது மனைவி எரிகா வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த வழக்கில் செலவாகும் மொத்த செலவையும் நிக்கோலஸ் தர வேண்டும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.