hip hop thamizha aathi engagement

'ஆம்பள' திரைப் படத்தின் மூலம் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதி குறுகிய காலத்திலேயே நல்ல இசையமைப்பாளர் என்கிற பெயர் பெற்றவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோயம்புத்தூரில் பிறந்த இவர் தன்னுடைய நண்பர் ஜீவாவுடன் இணைந்து இசை மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக 'ஆல்பம்' பாடல்களைப் பாடி வெளியிட்டார். அப்படி இவர் வெளியிட்ட 'வாடி புள்ள வாடி' , 'கிளப்புல மப்புல'போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மேலும் இவர் இசையமைத்த தனி ஒருவன், கவன் , அரண்மனை ஆகிய படங்களில் இவருடைய ஆர்ஆர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் சமீபத்தில் இவர் இயக்கி நடித்து வெளியான ' மீசைய முறுக்கு' படத்தில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் தோல்வியைப் பற்றிக் கூறி அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது. இது படத்தின் காட்சியாக இருக்கலாம் என அனைவரும் நினைத்த நிலையில், அது உண்மைதான் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயதார்த்தம், இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நேற்று திருப்பதியில் நடந்துள்ளது. பெண் ரசிகைகளை அதிகமாகக்கொண்ட ஹிப் ஹாப் ஆதி திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் புகைப்படம் மட்டும்தான் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் அவரைப் பற்றிய தகவல் வெளியாகலாம். அது வரை காத்திருப்போம்.