Asianet News TamilAsianet News Tamil

அலங்காநல்லூரில் ஹிப்-ஹாப் தமிழா..!!! - இளைஞர்கள் ஆர்ப்பரிப்பு

hip hop-tamizha-in-madurai
Author
First Published Jan 16, 2017, 11:10 AM IST

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற தடையை  மீறி மதுரை அலங்கா நல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வாலிபர்கள், காளைகளை அடக்க தீவிரமடைந்துள்ளனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழுவின் பெயர். இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்களாக உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆதி பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள். வணக்கம் சென்னை, எதிர் நீச்சலடி, நான், கத்தி, வை ராசா வை, ஆம்பள, தனி ஒருவன் ஆகிய படங்களில் பாடியுள்ளனர்.

தற்போது, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே, தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என பாடல் மூலம் குரல் கொடுத்தவர் ஆதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தடையை மீறி, அலங்காநல்லூர் வீதிகளில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுளளன. அதனை அடக்க நூற்றுக்கணக்கான வாலிபர்கள், அங்கு திரண்டுள்ளனர். இதை காண ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ளனர்.

அதே நேரத்தில,  ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கக்  கோரி ஜல்லிகிகட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே பல்லாயிரக்கணக்கானோர், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையில், திரண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக, பொதுமக்களுடன் இணைந்து, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஹிப் ஹாப் தமிழா ஆதி,இயக்குனர்க அமீர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி, அமைதி ஊர்வலம் நடத்த வேண்டும் என போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்காததால் இளைஞர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

கூட்டத்தினரை முன்னேறவிடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர். அப்பகுதி முழுவதும் போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் மிகுந்த எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அங்கு மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதால் காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios