கோலிவுட் திரையுலகில், இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருப்பவர் ஹிப் பாப் ஆதி. ஒரு சில வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்து வளர்ந்து வரும் ஹிப் ஹிப் பாப் ஆதி, பாடி நடித்த, இசை ஆல்பங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திரைப்படத்தை தாண்டி, திருக்குறள் மீது இவருக்கு அதிக ஈர்ப்பு உள்ளது. அதே போல் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி கிண்டல் செய்யும் விதமாக, எதார்த்தமாக ஒரு ட்விட் போட்டு பாதாரமாக நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார். 

ஏற்கனவே, யாருக்கு எப்போது  கொரோனா வரும் என தெரியாமல் ... பீதியில் முகமூடி யோடு சுற்றி கொண்டிருக்கும் சிலருக்கு இது செம்ம ஆத்திரத்தை ஏற்படுபத்தியுள்ளது. மேலும் இவர் போட்ட ட்விட்டால் காண்டான நெட்டிசன்கள் ஹிப் ஹாப் ஆதியை சமூக வலைத்தளத்தில் கிழி கிழி என கிழித்து வருகிறார்கள்.

ஹிப் ஹாப் ஆதி போட்டுள்ள ட்விட்டில் கூறி இருப்பதாவது... " காற்று வீசும் பகுதிகளில் படப்பிடிப்புக்குச் செல்லும்போது, ​ தூசிக்காக முகமூடி அணிந்தால், கூட  எல்லோரும் கொரோனா இருப்பதாக நினைக்கிறார்கள். கொரோனாக்கு நோ... எங்களிடம் நிலவேம்பு இருக்கு ப்ரோ என பதிவிட்டுருந்தார். 

இது தான் பலரது கோபத்திற்கு காரணம், என்ன நோய்க்கு என்ன குடிக்கணும்னு கூட தெரியாம இப்படி... பண்றீங்களே ஆதி...