Hinduism is not your personal property - kasturi budding Hindu folk
இந்து மதம் ஒண்ணும் உங்க தனிப்பட்ட சொத்து இல்லை. வேலி போட்டு காக்க என்று டிவிட்டரில் நடிகை கஸ்தூரி இந்து மக்கள் கட்சியினரை வெளுத்து வாங்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்தனர்.
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ''கைதாவது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. சட்டம் என்னை காப்பாற்றும்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது:
''ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்கள் 100 நாள்கள் சிறையில்தான் உள்ளனர். அவர்களை எதற்கு கைது செய்ய வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை எதிர்ப்பவர்கள் விஜய் டிவி மீது வழக்கு தொடுப்பார்களா?
முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து (இந்து முன்னணி கட்சி) தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தணும். இந்து மதம் ஒண்ணும் உங்க தனிப்பட்ட சொத்து இல்லை, வேலி போட்டு காக்க” என பதிவிட்டார்.
