high cout lawer file the case for lakshmi ramakrishnan and kushboo

தமிழ் சினிமாவில் நடிகைகளாக அறிமுகம் கொடுத்து, இன்று பிரபல தொலைக்காட்சி நடத்தும், குடும்ப சண்டைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கின்றனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை குஷ்பு.

இவர்கள் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையை சந்தித்து வருகின்றது. 

படிக்கத்தெரியாத பாமர மக்களை வரவழைத்தும், ஒரு சிலரை கவுன்சிலிங் தருவதாக வர சொல்லியும், ஏமாற்றி அவர்களை வைத்து TRP யை உயர்த்தி வருகின்றனர்இந்த நிகழ்ச்சியின் படைப்பாளிகள் .

மேலும் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் குழந்தைகள், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என 2011 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவந்தும் , அதையும் மீறி இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது குறித்து ஏமாற்றப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் அதனை காவலர்கள் ஏற்பது இல்லை என கூறப்படுகிறது.

தற்போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர்இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார், அதில் கூறி இருப்பது, மக்களின் குறைகளுக்கு ஒருவர் தீர்வு கொடுக்க வேண்டும் என்றால் முறையான படிப்பை படித்திருக்க வேண்டும்.

தற்போது தீர்ப்புகளை வழங்கி வரும் இவர்கள் எங்கு படித்தார்கள்?என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலர் இந்த நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப பிரச்சனை ஒளிபரப்ப பட்டதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

பொது மக்கள் மீதான அக்கரைக்கு நீதி மன்றம், மற்றும் நீதி பதிகள் உள்ளனர். இது அரசாங்க சட்டத்தை அவமதிப்பது போல் உள்ளது எனவே இந்த நிகழ்ச்சியை உடனே தடை செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.