High box office collection movies

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும் இரண்டு முதல் நான்கு படங்கள் வரை வெளியாகின்றன. அவற்றில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்சன் செய்வது ஒன்று அல்லது இரண்டு படங்களாகத்தான் இருக்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் கடந்த வாரம் ஜோதிகா நடித்து சூர்யா தயாரித்திருந்த மகளிர் மட்டும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருந்த துப்பறிவாளன், யார் இவன், மற்றும் களத்தூர் கிராமம் ஆகிய நான்கு படங்கள் திரைக்கு வந்தன.

ஆனால் இவற்றில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 1.6 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜோதிகா நடித்து வெளி வந்துள்ள மகளிர் மட்டும் திரைப்படம், கடந்த இரண்டு நாட்களில் 97 லட்சம் வசூல் செய்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான இட் கடந்த வாரம் முழுவதும் ரூ 1.34 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பது மட்டுமின்றி ஹிட் வரிசையிலும் இடம்பிடித்துவிட்டது.