Asianet News TamilAsianet News Tamil

Hey Sinamika first look : கலா மாஸ்டர் தங்கையின் புதிய முயற்சி..படத்தை வெளியிட்ட சூர்யா.. யார் படம் தெரியுமா?

பிருந்தா மாஸ்டர் துல்கர் சல்மானை வைத்து இயக்கியுள்ள ஹே சினாமிகா படம் வரும் பிப்ரவர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Hey sinamika movie first look released by surya
Author
Chennai, First Published Dec 21, 2021, 2:21 PM IST

மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரின் தங்கை பிரிந்தா மாஸ்டருக்கு சினிமாவில் பல நண்பர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக குஷ்பு இவரது நெருங்கிய தோழி என்று கூறலாம். குஷ்பு மூலமாகத்தான் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Hey sinamika movie first look released by surya
 
அதன் பிறகு கமலுடன் நம்மவர் படத்தில் சேர்ந்து நிர்மலா எனும் கதாபாத்திரத்தில் பிருந்தா மாஸ்டர் நடித்திருப்பார். 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் ஒரு பாடலுக்கு கோரியோகிராபர் ஆக பணியாற்றி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

 

இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios