விஜய்யின் 62-வது படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஹீரோயினை தேர்வு செய்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61-வது படமான மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இதே போல், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்பைடர் படத்தின் பிஸியாக இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், அனிரூத் கூட்டணியில் விஜய்யின் 62-வது படம் உருவாகவுள்ளது.

இப்படத்திற்காக ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில் முருகதாஸ் ஈடுபட்டு வந்தார். இதில், ரகுல் ப்ரீத் சிங்கை விஜய்க்கு ஜோடியாக தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதன் காரணமாக, அவரது நல்ல நடிப்பைத் தொடர்ந்து முருகதாஸின் முதல் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது கொசுறு தகவல்.