பிரபல தயாரிப்பு நிறுவனமான, 'தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர், ஹேமா ருக்மணி, உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவதிபட்டு தற்போது, மீண்டும் உடல் நலம் தேறி வந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்திருந்தவர், ஹேமா ருக்மணி. இவரின் கணவனருடன் சேர்ந்து தற்போது தேனாண்டாள் நிறுவனத்தில் மிக முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட நிகழ்வு குறித்து தெரிவித்து, உடல் ஒரு உணவை ஏற்று கொள்ளவில்லை என்றால் அதனை தவிர்த்து விடுமாறு விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பொதுவாகவே ஹேமாவிற்கு, கடல் உணவுகள் என்கின்றாள் ஒத்துகொள்ளதாம். எனவே அவர் எங்கு சென்றாலும் கடல் உணவை தவிர்த்து விடுவது வழக்கம்.

ஒரு முக்கிய திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹேமா கலந்து கொண்டுள்ளார். அப்போது, உணவு அருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததால், அங்கு உணவு பரிமாறுபவரை அழைத்து இந்த உணவு என்ன எண்ணையில் சமைக்கப்பட்டது என கேட்டுள்ளார். அவர் ரீ-ஃபைண்ட் ஆயில் என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

ஹேமாவும், அங்கு உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் முகம் வீங்க துவங்கியது. ஒரே இரவில் திடீர் என நான்கு கிலோ கூடியுள்ளார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் நீர் கோர்த்துள்ளதாக தெரிவித்தனர். பின் கடலை அதிகம் உற்கொண்டதால் இப்படி ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

பின்பு தான் தெரியவந்துள்ளது, ஹேமா ருக்மணி திருமணத்தில் சாப்பிட்டது, கடலை எண்ணெயால் தயாரிக்கப்பட்ட உணவு என்பது. அவர் எப்போதும், சன் பிளவர் ஆயிலில் சமைத்த உணவை மட்டுமே, சாப்பிடுவர். கடலை எண்ணெய் அவருடைய உடலுக்கு ஒத்து கொள்ளாததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று.

நிறைய மெடிசன், இன்ஜெக்ஷன், போன்ற சிகிச்சை மற்றும் மயக்கம், தலை சுற்றல் என பல்வேறு பிரச்சனைக்கு பின் தற்போது தான் அதில் இருந்து மறு ஜென்மம் எடுத்ததாக உணர்வதாக கூறியுள்ளார் ஹேமா ருக்மணி. மேலும் நம் உடலுக்கு ஏதாவது உணவு ஒத்துக்கொள்ள வில்லை என்றால் அதனை உண்பதை தவிர்த்துவிடுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.