பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான 'இன்ஸ்பெட் ராஜாவும் இதய ராணி' படத்திற்கு, இளைஞர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த படங்களை தொடந்து அடுக்கடுக்காக படங்களில் கமிட் ஆகி வருகிறார் ஹரீஷ் கல்யாண். அந்த வகையில் 'சஞ்சய் பாரத்தின் தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகத்தில் வெளியாகிய வெற்றி பெற்ற விக்கி டோனர் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் சொல்லாமலே, பிச்சைக்காரன் என குறிப்பிட்ட சில படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட பிரபல இயக்குனர் சசி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சசி தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.