பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்". இந்த படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கநாணயம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், பிரபல நடிகராக அறியப்படவில்லை. ஆனால் தற்போது முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில், கடந்த வாரம் "புரியாத புதிர்" படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்" திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

மேலும் மாகாபா ஆனந்த், பாலசரவணன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதல் படமாக உருவாகியுள்ள, இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடத்த வெற்றி விழா நிகழ்ச்சியில், நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.