நடித்தால் அட்ல்ட் கன்டென்ட் இருக்குற படங்களில் மட்டுமே நடிப்பேன் என ஹரிஷ் கல்யாண் முடிவு செய்துவிட்டார் போல. ஹரிஷ் அறிமுகமான "சிந்து சமவெளி" என்ற முதல் படமே தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. மாமனார் - மருமகள் இடையேயான கள்ளக்காதல் குறித்த கதைக்களத்தால் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. அடுத்து நடித்த "பியார் பிரேமா காதல்" படத்தில் லிவிங் டு கெதர் ரிலேஷன் ஷிப் குறித்து நடித்து, இளைஞர்களை உசுப்பேற்றினார். 

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான "தனுசு ராசி நேயர்களே" படத்திலும் காதல், ரொமான்ஸ், லிப் லாக் ஆகிய காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இப்படி அடுத்தடுத்து அட்ராசிட்டி செய்யும் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் "தாராள பிரபு". விந்து அணுவை தானம் செய்யும் நபராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். 

'தடம்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த தன்யா ஹோப், இதில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேருகிறார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விக்கி டோனர்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் "தாராள பிரபு". 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. கோட் சூட்டுடன் பிரம்மா கெட்டப்பில் தாமரை மலருக்கு நடுவே நின்றிருக்கும் ஹரிஷ் கல்யாண் கையில் 5 குழந்தைகள் தவழ்ந்து விளையாடுகின்றன. பார்க்கவே கலர் ஃபுல்லாகவும், ஏதோ இருக்கு என ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ள இந்த போஸ்டர் லைக்குகளை குவித்துவருகிறது.