நடிகர் - நடிகைகளிடம், பேட்டி கொடுக்கும் போதும், விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது மேடையில் காமெடியான சில கேள்விகளை கேட்பது வழக்கமான ஒன்றுதான். இப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பிரபலங்களும் சிரித்து கொண்டே தங்களுடைய பதிலை கூறுகிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாணிடம் தொகுப்பாளர், உங்களுக்கு எந்த நடிகையுடன் கைசாலாவில் செட்டில் ஆக ஆசை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ஹரீஷ் கல்யாண், நடிகை ரஷ்மிக்கா மந்தனாவின் பெயரை சொல்லி, அவர் தான் மிகவும் கியூட்டாக உள்ளார் என பதிலளித்துள்ளார். தற்போது ரஷ்மிக்கா நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் நடிகர் ஹரீஷ் கல்யாணம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் நடித்த, பியர் ப்ரேமம் காதல், இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தாராள பிரபு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஓரிரு தினத்திற்கு முன்  வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.