பிக்பாஸ் முதல் சீசனில், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தவர், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'இன்ஸ்பெட் ராஜாவும் இதயராணியும்' படமும் வெற்றி படமாக அமைந்தது.

தற்போது இவரின் கைவசம் 'தனுசு ராசி நேயர்களே', 'கசடதபற', 'தாராள பிரபு' மற்றும் இயக்குனர் சசி இயக்கும் படம் என நான்கு படங்கள் உள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்து வந்த, சஞ்சய் பாரதி இயக்கி வரும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் முதல் முறையாக ரியா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இவர் இந்த படத்தில் இருந்து விலகியதால், டிகங்கனா சூர்யவன்ஷி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் தெலுங்கில் ஏற்கனவே 'ஹிப்பி' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை தொடர்ந்து இப்படத்தில் ரெபாமோனிகா, என்கிற நடிகையும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். திடீர் என ரியா ஏன் மாற்றப்பட்டார் என்கிற காரணம் இன்னும் வெளியாகவில்லை.