விஜய் சேதுபதி  நடித்த ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி, இயக்கியுள்ள காதல் படம்  ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. 

 இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும்,  அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும் மா.கா.பா. ஆனந்த், திவ்யா துரைசாமி, பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.