சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய சீமராஜா திரைப்படம் வசூல் ரீதியாக கையை கடிக்கவில்லை என்றாலும், அவரின் முந்தைய படங்களை போல வெற்றிகரமாக அமையவில்லை. 

சிவகார்த்திகேயன் படம் என்பதால் ஆர்வமுடன் சென்ற அவரின் ரசிகரகள் பலரும் படத்தின் நீளம் அதிகம். காமெடி சரி இல்லை. தேவையே இல்லாத போர் காட்சிகள் என நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருப்பதால் செம அப்செட் ஆகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என ஓவெ பில்டப் எல்லாம் கொடுத்தும் கதை இப்படி ஆகிவிட்டதான் நொந்து போயிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அவரின் அன்பு மகளால் சந்தோஷமான செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. கனா திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் அவரது மகளுடன் சேர்ந்து “வாயாடி பெத்தபுள்ள” எனும் பாடலை பாடி இருந்தார். 

அந்த பாடல் கூட இணைய தளங்களில் வைரல் ஆகி இருந்தது. இந்த வீடியோவை இதுவரை 30 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர். இந்த செய்தி அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

மேலும் இந்த பாடலை இதுவரை 5 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர். பெரிய பெரிய ஹீரோக்களின் படத்தின் பாடல் கூட இந்த அளவிற்கு வரவேற்பினை பெற்றது கிடையாது. 

இதனால் தன் மகள் பாடிய பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த கனா படத்தினை தயாரித்திருப்பதும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சீமராஜா கவுத்தினா என்ன அதால் இளவரசி இருக்கிறாரே கைகொடுக்க என நிம்மதி அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.