தமிழகத்தில் திராவிட இனத்துக்காக மாபெரும் தொண்டாற்றிய முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு , அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் வேதனையை விதைத்திருக்கிறது. 

ஓயாமல் உழைத்த சூரியன் இப்போது ஓய்வு கொண்டிருக்கிறது என மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாலும், அந்த தலைவனின் கண்ணீர் குரலில் செந்தமிழ் கவிதை வரிகளை மீண்டும் கேட்க முடியாதே! எனும் ஏக்கம் ஒருபக்கம் இருக்க தான் செய்கிறது. 
கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகமே துக்கம் அனுசரித்து வருகிறது. 

பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் கூட தலைவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர். 
நடிகை ஹன்சிகாவும் அதே போல அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் மிகவும் பண்புடன் நடந்து கொண்டிருக்கிறார். 

இன்று ஹன்சிகாவின் பிறந்தநாள். இதனால் அவர் நடிக்க உள்ள 50வது திரைப்படத்தின் பெயர் என்ன என்பதை, அவரின் பிறந்த நாள் அன்று தனுஷ் அறிவிப்பதாக இருந்தது. ஆனால் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த படத்தின் பெயரை பின்னர் தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறாராம் ஹன்சிகா. 

இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருக்கிறார். ஆனால் ஸ்ருதிஹாசனோ மிக சாதாரணமான விஷயம் ஒன்றை மிகவும் சந்தோஷமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதுவும் கலைஞருக்காக நாடே வருந்தி கொண்டிருந்த தருணத்தில். இதனால் ஹன்சிகாவுக்கு தெரிந்த மரியாதை கூட இந்த ஸ்ருதி ஹாசனுக்கு தெரியாமல் போயிடுச்சே! என வருந்தி இருக்கின்றனர் கோலிவுட் பிரபலங்கள்.