hansika too slim shocking photo

தமிழ் சினிமாவில் புசு புசுன்னு அழகாக அறிமுகமான நடிகை ஹன்சிகா. தற்போது குண்டாக இருப்பதால் தான் பட வாய்புகள் கிடைக்க வில்லை என சிலர் கூறிய அட்வைஸ் படி தன்னுடைய உடல் எடையை குறைக்க துவங்கினார்.

எப்படியோ உடல் எடையை குறைத்த ஹன்சிகாவை, இப்போது பார்க்கும் ரசிகர்கள் நீங்க நல்லாவே இல்லை புசு புசு ஹன்சிகா தான் அழகு என்பது போல் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் ஹன்சிகா உடல் எடையை குறைத்துக்கொண்டே போகிறார். 

அறிமுகம்:

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்', விஜய்க்கு ஜோடியாக 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். 

முன்னணி நடிகர் படங்களில் ஹன்சிகா:

கோலிவுட் இளம் நாயகிகளுக்கு டப் காம்பட்டீஷன் கொடுத்து வந்த இவர், விஜய், சூர்யா, சிம்பு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

கடந்த இரண்டு வருடங்களாக ஹன்சிகாவின் மார்க்கெட் சற்று டல்லடிக்க துவங்கி விட்டது. இவர் நடித்து வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறாததால் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 

எலும்பும் தோலுமாக மாறிய ஹன்சிகா: 

இந்நிலையில் தற்போது ஹன்சிகா ஒல்லியாக எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது என்பது போல் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாக ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர்... ரசிகர்கள் பாவப் படும் அளவிற்கு தற்போது ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ...