எங்கயும் காதல், ரோமியோ ஜூலியட் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி ஜோடியாக போகன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைத்துள்ளார் ஹன்சிகா.
அதே போல் 'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைத்துள்ளதால் மேலும் இந்த படத்திற்கு எதிரிபார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்காக தான் இதுவரை வாழ்க்கையில் செய்யாத தவறு ஒன்றை செய்துள்ளதாக ஹன்சிகா ஒரு பெட்டியில் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால் முதன்முதலாக இந்த படத்திற்காக சரக்கு அடித்ததாக ஓபன்னாக கூறியுள்ளார். மேலும் இதுபோல் இந்த படத்தில் பல விளையாட்டுத்தனமான வேலைகள் செய்துள்ளதாகவும், அந்த காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
