hansika give the shock for fans
நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானதில் இருந்து, இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில் சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தினாலும், இவருடைய உடல் எடை அதிகரித்தாலும் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் நண்பர்கள் அறிவுரையைக் கேட்டு, ஒல்லியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் ஹன்சிகா. மேலும் தற்போது இவருடைய கைவசம் உள்ள ஒரே தமிழ்ப் படம் குலோபகவாலி மட்டுமே.
உடல் எடையைக் குறைத்து மிகவும் கச்சிதமான உடல் தோற்றத்திற்கு இவர் மாறியுள்ளதால் இவர்க்கு மீண்டும் கோலிவுட்டில் இன்னொரு ரவுண்டு வர வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

