hansika about simbu love failure
நடிகை ஹன்சிகாவும், சிம்புவும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் திருமணத்தில் முடியும் அளவிற்கு தீவிரமாக இருந்தது.
சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் தங்களது காதலை பத்திரிகையாளர்களுக்கு முன் ஒப்புக்கொண்டு விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்தனர்.

ஆனால் தீடீர் என யார் கண்பட்டதோ தெரியவில்லை, தங்களது காதல் முறித்து விட்டதாகவும் தெரிவித்தனர். காதல் முறிவுக்கு பின் இருவரும் வாலு படத்தில் எடுக்க பட்ட ஒரு பாடலுக்கு இணைந்தும் இவர்களது காதல் ஒன்று சேரவில்லை.

அண்மையில் ஹன்சிகா நடிகர் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் எங்களது ஜோடி மிகவும் அம்சமான ஜோடி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தையை நாள் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும், இந்த வார்த்தை கூறியபின் அவருடன் நாள் இருந்தால் அந்த வழக்கை அருவருப்பானதாக இருக்கும் என்கிற காரணத்தால் தான் பிரிந்துவிட்டேன் என்றார். ஆனால் அவர் கடைசி வரை அப்படி என்ன வார்த்தை என்பதை தெரிவிக்கவே இல்லை.
