நடிகை ஹன்சிகா சிம்புவை காதலித்து பிரிந்த பின் மீண்டும் நான்கு வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு, சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த போது  இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பின் இருவரும் தங்களுடைய காதலை உறுதி செய்ததோடு, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். இவர்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் வெளியானது. அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறினர். ஆனால் இதற்கான காரணத்தை இருவருமே வெளியிடவில்லை.

இந்நிலையில் சிம்பு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் "மஹா". இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார்.  இந்தப் படத்தில் ஹன்சிகா பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார். 

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் படக்குழு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . சிம்புவும் ஒப்புக்கொள்ள 'சோயப்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க 7 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளனர். பிளாஷ் பேக் காட்சியில் வலம்வரவுள்ள சிம்பு ஒரு பாடலுக்கு, ஹன்சிகாவுடன் இணைந்து ரொமான்டிக் டான்ஸ் ஆட உள்ளாராம். சிம்புவின் காட்சிகள் இஸ்தான்புல்லில் படமாக்கப்படவுள்ளன.

எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 25ஆவது படமாகும். மேலும் ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.