வலிமை (Valimai) படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வலிமை படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவலை இயக்குனர் எச்.வினோத் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டிரெய்லர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதன்மூலம் வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பண்டிகைக்கு வலிமை படத்தின் டிரெய்லர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மேலும் இரண்டு பாடல்கள் இருப்பதாகவும், அப்பாடல்களை வலிமை திரைப்படம் ரிலீசாகும் தினத்தன்று வெளியிட உள்ளதாக எச்.வினோத் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த இரண்டு பாடல்களும் படத்தின் கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாம். அதை தற்போது வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால், படம் ரிலீஸ் ஆன உடன் வெளியிட உள்ளார்களாம்.