இயக்குநர் பா.ரஞ்சித் மீது வன்மத்தைக் கக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அசிங்க அசிங்கமான கமெண்டுகளைப் போட்டு,  அதற்கு பரிசாக தரங்கெட்ட வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டிருகிறார் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’படத்தின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி ,,,இந்த நிலமெங்கும் நம் உழைப்பிருக்கிறது,நமக்கென்று ஏன் நிலமல்லை? ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தரப்பட்ட 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் எங்கே?#காலா வின் முதலாண்டில் கேள்வி எழுப்புவோம். #உரிமையைமீட்போம்💪நிலம் எங்கள் உரிமை💙📝@beemji என்று குரல் எழுப்பியிருந்த பா.ரஞ்சித்,  கொஞ்சம் டூமச்சாக மன்னர் ராஜராஜ சோழன் வரை டிராவல் பண்ணி, ஆதி தமிழர்களிடம் ராஜராஜன் நிலத்தை பிடுங்கிய கதைக்கெல்லாம் போனார்.

பா.ரஞ்சித்தின் ட்விட்டை எப்படிப்புரிந்துகொண்டாரோ தெரியவில்லை. அதற்கு மிக ஆக்ரோஷமாக பதிலளித்த ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்,...மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாக பேசியுள்ள ப.ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள்.  இவர்கள் அனைவரின் குறிக்கோள் தமிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே’என்று குறிப்பிட்டு ரஞ்சித் தனது மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலுக்குப் பொங்கிய ரஞ்சித் கூட்டாளிகள்,...ஒரு கட்சியின் இந்திய தேசியச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித்தைக் கண்டிக்கும்  பதிவில் அவர் மனைவி, பெண் குழந்தை படத்தையும் பதிவிடுவது எவ்வளவு  கீழ்த்தரமான, வக்கிரமான உயர்த்தப்பட்ட சாதி வெறி கொண்ட செயல்பாடு.உங்கள் உள்நோக்கம்  பல்லிளிக்கிறதே!’ என்று கமெண்ட் அடித்துவருகின்றனர்.