g.v.prakash paid homege anitha in ariyalur

நீட் தேர்வு பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மரியாதை செலுத்தினார்.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகினரும் அனிதாவின் மரணத்துக்கு இரங்கலும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அனிதாவின் தந்தையைப் பார்த்து, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், மத்திய பாடத் திட்டத்தில் உள்ள தேர்வை எழுத முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்