உண்மை கதையை மையமாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ் பிஸியாக இருக்கிறார். 

உண்மை கதையை மையமாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தனுஷ் ரசிகர்களுக்காக அவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் 'அசுரன்' படத்தின் பாடல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒரு சூப்பர் ஸ்பெஷல் தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…