gv prakash has tweet a video along with uncle ar rahman
இசை பிரியரும் ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது மாமாவான இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உடன் 25 வருடத்திற்கு முன் பாடிய பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், தான் 3.5 வயதான போது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்த பாடலை பாடியதாக தெரிவித்து உள்ளார்
ஏ. ஆர் ரஹ்மான் அவர்களின் அக்கா மகனான ஜி.வி பிரகாஷ், தான் சிறு வயதாக இருக்கும் போதே ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் இசையில் மூழ்கியவர்.
இன்று பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர் ஏ.ஆர் ரஹ்மான்.இது ஒரு பக்கம் இருக்க, தற்போது இசை அமைப்பாளர், பாடகர், மற்றும் நடிகர் என அனைத்திலும் வெற்றி நடைப்போட்டு வருகிறார் ஜிவி
மேலும் இந்த ஆண்டு மட்டும் ஜி வி யின் மூன்று படங்கள் வெளிவர உள்ளது என்றால் பாருங்களேன்.....
ஒவ்வொரு ஆண்டும் ஜி.வி அடுத்தடுத்த மைல்கல்லை தொட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்காக தன்னுடைய மழலை குரலில் பாடிய பாடலை வெளியிட்டு நினைவினை பகிர்ந்து உள்ளார்
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இடம் பெற்று உள்ள ஜி வி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக, திறமையாக பாடுவதை பார்க்கும் போது அனைவருக்கும் ஒரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இன்னொரு புறம் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான், வாலிப வயதில் எப்படி உள்ளார் என்பதை பார்த்த அவருடைய ரசிகர்கள்... அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏ.ஆர் ரஹ்மானா இது என்று ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
இன்று உலகம் முழுவதும் கொடி கட்டிக்பறக்கும் இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மானின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
