Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்த யோகி பாபுவின் ‘கூர்கா’ டீஸர்...

முன்னணி நட்சத்திரங்களின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘கூர்கா’ படத்தின் ட்ரெயிலர் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்க் கடந்து சாதனை படைத்துள்ளது.

gurka movie teaser
Author
Chennai, First Published Apr 26, 2019, 11:41 AM IST

முன்னணி நட்சத்திரங்களின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘கூர்கா’ படத்தின் ட்ரெயிலர் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்க் கடந்து சாதனை படைத்துள்ளது.gurka movie teaser

ரஜினி,விஜய்,அஜித் படங்கள் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடியனாகக் கலக்கி வரும் யோகிபாபு தற்போது ஹீரோ அவதாரம் எடுத்தும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ‘கூர்கா’ வெளிவரவிருக்கிறது.

நேற்று வெளியான அப்பட ட்ரெயிலரில் சுவாமி நித்யானந்தா தொடங்கி ,மெர்சல் படத்தின் தளபதி விஜய், செல்ஃபி எடுக்கும் போது சிவகுமார் தட்டி விடுவது ஆகியவற்றை வரிசைகட்டி கலாய்க்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சக்திமான் தொடரையும் கலாய்க்கும் வகையிலும், இந்த டீசர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. gurka movie teaser 

‘டார்லிங்’, ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ மற்றும் ’100’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி படம் கூர்கா. இப்படத்தில், முன்னணி ரோலில் யோகி பாபு நடித்துள்ளார். இவருடன் இணைந்து மயில்சாமி, மனோபாலா, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சார்லி, எலிசா எர்ஹட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இந்த டீஸரை ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios