கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து இயக்குனர் S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் “ குலேபகாவலி ”. 

இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவாவும், கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானியும், நடிக்கின்றனர் மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ”முனீஸ்காந்த்” ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன்,சத்யன், யோகிபாபு மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துவருகின்றனர். 

பரபரப்பாக இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இப்படத்திற்காக இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை அமைக்க வேண்டும் என்று எண்ணிய போது தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தை போல வடிவமைக்க திட்டம் தீட்டினார். 

அதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்த பொழுது, கதிர் ஒரு கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். 

உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் கலை இயக்குனர் கதிரிடம் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார். இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் அரங்க பணியை ஐந்நூருக்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை இருபத்தைந்து நாட்களில் உருவாக்கினார்கள்.
   
  விவேக் – மெர்வினின் அசத்தலான இசை அமைப்பில் துள்ளிகுதிக்க வைக்கும் விதத்தில் உருவான இந்த பாடல் இப்படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை  நடனம் அமைக்க வைத்தால் நன்றாக இருக்குமென்று பிரபு தேவா தயாரிப்பாளரிடம் தன்விருப்பத்தை சொன்னவுடன் உடனே தயாரிப்பாளரும் ஹைதராபாத்திலிருந்து நடன இயக்குனர் ஜானியை வரவழைத்தார். 

ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர். இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திக்கை அளிக்கப்பட்டது. மேலும் இப்பாடலை மெருகேற்ற மும்பை மாடல்களை வரவைத்தனர். 

ஆனந்த குமாரின் அழகிய ஒளிப்பதிவில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இப்பாடல் விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பில் தயாராகிவருகிறது. மேலும் பாடல் காட்சிகளில் பிரமிக்க வைக்கும் குலேபகாவலியின் சண்டைக்காட்சிகளிலும் புதுமை செய்ய படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் அவர்களுடன் ஆலோசித்து வருகின்றனராம் படக்குழுவினர்.