Asianet News TamilAsianet News Tamil

இந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா? 

guess who is this?
guess who is this?
Author
First Published Nov 28, 2017, 8:02 PM IST


இயக்குனர் பாலா இயக்கிய 'தார தப்பட்டை' படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகம் ஆனவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்... இதைத் தொடர்ந்து மருது படத்திலும் வில்லனாகவே நடித்தார்.

இந்நிலையில் இவர் ஹீரோவாக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதோடு... விஜய் சேதுபதி, கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் பாணியில் படத்திற்கு படம் தன்னுடைய வித்தியாசமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். 

guess who is this?

அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள ஷிக்காரி ஷாம்பு என்ற படத்தில் 70 வயது முதியவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளார்

மேலும் இந்தப் புகைப்படத்தை அவரே தன்னுடைய ட்விட்டர் பகுதியில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளாராம். இவரைப் பார்த்து பலர் பரிதாபமாக இருக்கிறீர்கள் என கமென்ட் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios