திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். கதாநாயகன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என? மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. 

கதாநாயகி இல்லாமலேயே இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நாச்சியார் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். 

இந்நிலையில் நேற்று... வர்மா படத்தில் துருவுக்கு ஜோடியாக கெளதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க உள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

 

இந்த செய்தி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள கௌதமி 'சுப்புலட்சுமி தற்போது எந்த திரைப்படத்திலும் நடிக்க வில்லை என்றும் அவர் தன்னுடைய முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். இதில் இருந்து விக்ரம் மகனுக்கு ஜோடியாக சுப்புலட்சுமி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.