நடிகை கௌதமி உலக நாயகன் கமல்ஹாசனுடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கையில் இருந்து தனது மகள் எதிர்காலம் கருதி பிரிவதாக கூறி சமீபத்தில் பிரிந்தார்.

இந்நிலையில் கவுதமியின் மகள் சுபலட்சுமி ஒரு முன்னணி நடிகரின் படத்தில் அறிமுகமாக உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த செய்தியை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். 'என்னுடைய மகள் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக எண்ணி பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் . அவர் தற்போது தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு நடிகையாகும் எண்ணம் அவருக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீ தேவி இதே போல் கூறி வந்து தாற்போது அவரது மகள் ஜானவி இப்போது ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பது குறிப்பிட தக்கது.