தமிழ் சினிமாவில் திருப்பி பார்க்க வைத்த நாயகிகளில் கௌதமியும் ஒருவர். 80பதுகளில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் கமலுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் கமலுடன் பாபநாசம், நாம் போன்ற சில படங்களிலும் நடித்தார்.

இப்போது கமல் நடிக்கும், சபாஷ் நாயுடு படத்தில் கஸ்டியூம் டிசைனர் ஆகா வேலை பார்த்து வருகிறார்.

இவர் இப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார், சந்திப்பின் போது எடுத்த போட்டோவையும் சமூக வலயத்தளத்தில் ஷேர் செய்து சந்திப்பை உறுதி படுத்தியுள்ளார் கௌதமி.

இவர் சந்தித்ததற்கான காரணம் புற்று நோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுக்காக என சொல்ல படுகிறது.

ஏற்கனவே, இவர் புற்று புற்றுநோயில் இருந்து மீண்டவர் என்பது குறிப்பிட தக்கது, மேலும் புற்று நோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளில் கலந்து கொள்வது மட்டும் இன்றி, ஒரு அமைப்பையும் நடத்தி வருகிறார்.