நடிகர் சிம்பு தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான, கௌதம் கார்த்தியுடன் இணைந்து, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில், சிம்புவுடன் இணைந்து முதல் முறையாக நடித்து வருகிறார் பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே கௌதம் கார்த்தி சிம்புவிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கி உள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.   

இந்த வீடியோவை வெளியிட்டு சிம்பு,  மிகவும் நல்ல மனிதர் என்றும் அவருடைய ரசிகனாக அவருடன் நடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது என கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.