தனது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸுக்கு உதவ முன் வந்ததற்கு பிராயச்சித்தமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு ஒரு படம் இயக்கித்தர சம்மதித்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இது விஜயை வைத்து கவுதம் இயக்குவதாக இருந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விஜய் இதுவரை தமிழில் பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில்  நடித்தது இல்லை. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவிருந்த“யோகன் அத்யாயம் ஒன்று” என்ற படம் படப்பிடிப்பு தொடங்காமலே கை விடப்பட்டது. 

அப்போது  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியான நிலையில்  படம் கைவிடபட்டது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தின் முழு கதையை விஜய்யிடம் தாம் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் “நடிகர் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால், இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே நான் விஜய்யுடன் கூறினேன். அதனை கேட்ட விஜய் இந்த படத்தின் முழு கதையை தயார் செய்து பின்னர் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.ஆனால், நான் தான் தாமத படுத்திவிட்டேன் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் இந்த படம் மீண்டும் துவங்க உள்ளது. ஆனால், இதில் விஜய் கதாநாயகன் இல்லையாம். இந்த படத்தை ஐசாரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம். நடிகரான இவர், போகன், ஜூங்கா, தேவி 2 போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும், இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தான் யோகன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். மிக நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் கவுதமின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’படத்தை ஐசரி கணேஷ் ரிலீஸ் பண்ணித்தர சம்மதித்ததை ஒட்டி அதற்கு நன்றிக்கடனாகவே கவுதம் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.