96 படத்தின் மூலம் குட்டி ஜானுவாக ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த நடிகை கௌரி கிஷன் மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்றதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும். அதில் பள்ளிப் பருவக் காதலர்களாக வரும் நாயகன் ஆதித்யா பாஸ்கரும் நாயகி கௌரி கிஷனும் விஜய்சேதுபதி, த்ரிஷாவை ஓரம்கட்டும் நடிப்பை கொட்டியிருந்தனர். இன்னும் கொஞ்ச நேரம் இவர்களது காட்சிகள் வராதா என ரசிகர்கள் ஏங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருவரும் தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் நாயகி கௌரி கிஷனை மலையாளத் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

View post on Instagram

துஸார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார்.‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் பிப்ரவரி 7ஆம் தேதி கௌரி கிஷன் இணைந்துள்ளார். இதனைக் கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.