சின்னத்திரையில் தனது பேச்சாலேயே அனைவர் மனதையும் கவர்ந்தவர் பிரபல தொகுப்பாளர் கோபிநாத். 

தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரமித்து நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களிலும் நடித்துவிட்டார்.

பலருக்கும் கோபிநாத் என்றாலே நினைவிற்கு முதலில் வருவது அவர் அணியும் கோட் தான். இதனால் பலரும் அவரை கோட் கோபிநாத் என்றுதான் அழைப்பார்கள்.

இவர் எதற்காக கோட் அணிகிறார் என்ற ரகசியத்தை அவரே கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தனக்கு கோட் அணிவதே பிடிக்காது என்றும், நான் கோட் அணியும் முறையே சரி கிடையாது.

ஆனால், மைக் இருப்பதை மறைக்கவே கோட் அணிகிறேன் என்று தெரிவித்துள்ளார், அதுவே தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது, தன்னிடம் சொந்தமாக ஒரு கோட் கூட இல்லை’ என தெரிவித்துள்ளார்.