விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா? நானா? நிகழ்ச்சியை, தன்னுடைய கம்பீர குரலால் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் கோபிநாத். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதே போல் இவர் வெளியிட்டுள்ள புத்தகங்களும் அதிக பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்தது.

செய்தியாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, இன்று தன்னுடைய ஆணித்தனம்மான கருத்துக்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும், மக்கள் மனதை வென்று சிறந்த தொகுப்பாளர் என்றும் நல்ல மனிதர் என்றும் பார்க்கப்பட்டு வருகிறார். 

சின்னத்திரையை தாண்டி 'தனி ஒருவன்', 'திருநாள்' ஆகிய படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தனக்கு பொருந்தும் கதைக்களம் அமைத்தாலும் நடிப்பேன் என கூறுகிறார்.

 

இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய இவருக்கு, விஜய் டிவி பிரபலம் டிடி, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவருடைய மகள் வெண்பா இவருக்காக கிட்டாரில் 'ஹாப்பி பர்த்டே' பாடலை வாசித்து அப்பா இது உங்களுக்காக என கூறி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ...