உலகில் ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்த இடத்தில் முக்கிய விருதாகக் கருதப்படுவது கோல்டன் க்ளோ விருது. சிறந்த ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் இவ்விருதின் 2018 க்கான வெற்றியாளர்கள் பட்டியல் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டது.

இதோ அந்தப் பட்டியல்...

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த திரைப்படமாக - கிரீன் புக்

நாடக வடிவிலான சிறந்த திரைப்பட நடிகர் - ரமி மாலிக், போஹ்மியன் ரஃப்சோடி

நாடக வடிவிலான சிறந்த திரைப்பட நடிகை - க்ளென் க்ளோஸ், தி ஒயிஃப்

சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி, கிரீன் புக்

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங், இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த நடிகர் - கிரிஸ்டியன் பேல், வைஸ்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மன், தி ஃபேவரட்


சிறந்த இயக்குநர் - அல்போன்சோ காரோன், ரோமா

சிறந்த பாடல் - ஷல்லோ, ஏ ஸ்டார் இஸ் பார்ன்

சிறந்த அனிமேஷன் படம் - ஸ்பைடர் மேன்: இண்டூ தி ஸ்பைடர் - வெர்ஸ்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் - பீட்டர் ஃபெரெல்லி, நிக் வெல்லேலோங்கா, - கிரீன் புக்

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ரோமா

வாழ்நாள் சாதனையாளர் விருது - கரோல் பர்னெட்