விமர்சனம் ’ஜீனியஸ்’... மேதை என்ற பெயரில் ஒரு மகா மக்கு!
ஒரு நல்ல படம் அடுத்து ரெண்டு குப்பைப்படங்கள் என்ற ஃபார்முலாவில் எவ்வித குழப்பமுமின்றி சீராக பயணித்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். வங்கி இருப்பு கொஞ்சம் குறைந்தால் தயாரிப்பாளர்களின் பிள்ளைகளையோ பேரன்களையோ ஹீரோவாக்கி செம துட்டு பார்த்து செட்டில் ஆகிவிடுவதும் அவரது இன்னொரு டாக்டிக்ஸ்.
ஒரு நல்ல படம் அடுத்து ரெண்டு குப்பைப்படங்கள் என்ற ஃபார்முலாவில் எவ்வித குழப்பமுமின்றி சீராக பயணித்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். வங்கி இருப்பு கொஞ்சம் குறைந்தால் தயாரிப்பாளர்களின் பிள்ளைகளையோ பேரன்களையோ ஹீரோவாக்கி செம துட்டு பார்த்து செட்டில் ஆகிவிடுவதும் அவரது இன்னொரு டாக்டிக்ஸ்.
யோவ்... படத்தைப்பத்தி விமர்சனம் எழுத்தச்சொன்னா இந்தப் பஞ்சாயத்தெல்லாம் என்னத்துக்கு...? என்று கோபிப்பவர்கள், பெரும் ஃபைனான்சியரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான ரோசனை ‘ஜீனியஸ்’ பட ஹீரோவாக ர்ண்டு மணிநேரம் பார்த்து அவரது நடிப்பை ‘அனுபவித்தால்’ மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். பத்து சிவாஜியையும் இருபது கமலையும் ஒருசேரப்பார்த்ததுபோல் என்று சொல்வார்களே அப்படி ஒரு நடிப்பு.
என்னமோ போங்கப்பா... கதைக்கு வருவோம். நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ள தினேஷ் (ரோஷன்) மனநலம் பாதிக்கப்படுகிறார். ஏன் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என்பது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மூலம் ஃப்ளாஷ்பேக்காக விரிகிறது. அவர் நன்றாகப் படிப்பதை கொஞ்சம் லேட்டாக அறியவரும் அவரது தந்தை ஒரு கட்டத்தில் படிப்பைத் தவிர வேறு எந்த செயலிலும் ஈடுபடவிடாமல் அழுத்தம் தருகிறார். விளையாட்டு, நண்பர்கள், பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லாத ரோஷன் லைட்டாக மெண்டல் ஆகிறார். அடுத்து அவர் வேலைக்குச் செல்லும் இடத்திலும் டார்கெட் என்ற பெயரில் நிறுவனம் அவரக் கசக்கிப்பிழியவே முழு மெண்டல் ஆகிறார்.
அடடே ஒரே பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என்று தந்தை நரேன் தவிக்க, அவரது நண்பரான சிங்கம்புலி ரோஷனை ஒரு மஸாஜ் பார்லரில் வேலை செய்யும் செக்ஸ் தொழிலாளியிடம் அழைத்துச்சென்று ஒரே பாடலில் கூடல் நடத்தி குணப்படுத்துகிறார். அடுத்து என்ன நடக்கவேண்டும். யெஸ் மணந்தால் மஸாஜ் பார்ட்டிதான் இல்லையேல் மறுபடியும் மெண்டலாகிவிடுவேன் என்று ரோஷன் தந்தையை மிரட்ட....ம்... இப்பிடிக்கா போகிறது கதை.
என்னங்க இந்தக்கதைக்கு என்ன குறைச்சல் என்று முறைச்சல் கொடுக்கிறவர்கள் ஒரு எட்டு தியேட்டருக்குப்போய் தாராளமாய் அனுபவிக்கலாம். தனக்கு வந்த பேமெண்டை மற்ற டெக்னீஷியன்களுக்கு சுசீந்திரன் சரியாய் பிரித்துக்கொடுக்கவில்லையோ என்னவோ டெக்னிக்கலாக படம் மிகவும் பரிதாபமாக பல்லிளிக்கிறது. யுவன் ஓரளவு கொடுத்த காசுக்கு கூவியிருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் வரும் நாயகி பிரியாலால் ஃபைனான்சியர் ரோஷனுக்கு மஸாஜ் பண்ணும்போது போதை கண்களுடம் நமக்கும் கொஞ்சம் கிளுகிளுப்பு ஏற்றுகிறார். மற்றபடி ஒரு மகா மக்குப்படம்.