Gayatri Raguram Shame for oviya fans

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரமே வெளியேற்றப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி நேற்று வெளியேற்றப்பட்டார்.

பொதுவாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன், போட்டியாளர்கள் செய்த தவறுகளை வீடியோ மூலம் சுட்டி காட்டுவது தான் வழக்கம். ஆனால் நேற்றைய தினம் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சியை நாள் தோறும் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் மனதில் உள்ள கேள்விகளை அவர்களே கேட்டு தெரிந்துகொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும், பெண் செய்தியாளர் ஒருவர் காய்த்திரிக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார், அதனை தொடர்ந்து பலர் ஓவியாவிற்கு ஆதரவாகவும், காயத்ரி உட்பட அனைத்து போட்டியாளர்களுக்கு எதிராகவும் ஈட்டி போல் காயத்ரியை கேள்விகளால் குத்தினர்.

அனைத்து கேள்விகளுக்கும் சமாளிப்பது போல், சிரித்துக்கொண்டே பதில் கூற முடியாமல் திகைத்து போய் நின்றார் காயத்ரி. இதில் ஒரு பெண், ஏன் நீங்கள் ஓவியாவை வெறுப்பேற்றவே இல்லை என பொய் சொன்னீர்கள் என கேட்டு காயத்ரி தலைகுனியும் அளவிற்கு கேவலப்படுத்திவிட்டார்.