gayatri raguram emotional speech
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களும் தங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள டீ, காபி, என ஏதாவது ஒன்றை குடிக்கின்றனர். ஆனால் தனக்கு வெறும் பால் குடித்தால் பிடிக்காது. ஏற்கனவே தன்னுடைய உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளதால் தனக்கு சாக்லேட் பவுடர் வேண்டும் என காயத்ரி ரகுராம் கேட்டார்.
இவரது கோரிக்கையை ஏற்ற "பிக் பாஸ்" இவருக்கு கால்சியம் குறைவாக உள்ளதா என சரிபாத்தபோது சீராக இருப்பதாக கூறி இவர் கேட்டபடி இவருக்கு சாக்லேட் பவுடர் கொடுத்தனர்.
சீராக இருப்பதை ஏன் வெளியில் வந்து மற்ற போட்டியாளர்களிடம் குறைவாக உள்ளதாக தெரிவித்தீர்கள் என காயத்ரி ரகுராமிடம் கமலஹாசன் கேட்டபோது... தனக்கு ’சீராக’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என விளக்கம் கொடுத்தார் காயத்ரி ரகுராம்.
இப்படி பல பேர் முன்னிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக கூறி இனி பிக் பாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பிஸ்கட் , பீசா, பர்கர் போன்ற எந்த ஒரு தின்பண்டங்களும் வேண்டாம் என நமிதாவிடமும், ரைசாவிடமும் காயத்ரி கூறினார்.
மேலும் நான் இங்கு சாப்பாடு சாப்பிட காரணம் கூட இங்கு செய்யும் வேலைக்காகத்தான் சாப்பிடுகிறேன்... எனக்கும் ரோஷம் இருக்கு... மரியாதை இருக்கு... மானம் இருக்கு... என மிகவும் கோபமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்ப்பது போல் கூறினார்.
