பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பாதி பிரச்சனைகளுக்கு காரணமானவர் காயத்ரி தான். தற்போது இவருடைய நண்பர் சக்தி வெளியேறியதில் இருந்து பிரச்சனை செய்யும் குணத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, சண்டைபோடுபவர்களை சமாதானம் செய்து வருகிறார்.

நேற்றைய தினம் கூட ஆரவ், சினேகனை மிகவும் கோபமாக திட்டியபோது  ஆரவை சமாதான படுத்தி சண்டையை தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று பிக் பாஸ் அறையில் பேசும் போது, தயவு செய்து இந்த வாரம் என்னை வெளியே அனுப்பி விடுங்கள் இனி நான் இங்கு இருந்தால் அழுது விடுவேன் என்றும், மற்றவர்கள் காதல் கதையை கேட்பதற்கு நான் இங்கு இல்லை "என்னை வெளியே அனுப்பினால் என்னுடைய காதல் கதையை நான் பார்ப்பேன் என்று கூறினார்".

இதன் மூலம் இதனை நாள் தன்னுடைய காதலை பற்றி வெளியே சொல்லாமல் இருந்த, காயத்ரி முதல் முறையாக உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.