gayathiri scolding oviya
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் தலைவியாக இருந்தவர் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்திரி ரகுராம். சில நாட்களாக தன்னுடைய சுயரூபத்தை வெளியே காட்டாமல் அடக்கி வாசித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மோசமான முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த போது... ஓவியா ஒரு விஷம் என்றும் நேற்று இரவு பெரிய ஏழரையை கூட்டிவிட்டாள் என கூறுகிறார். அதற்கு சக்தி ஏன்? என்ன ஆனது என கேட்க, பரணியை நீங்க எப்படி வெளியில அனுப்பலாம் என கேட்கிறாள்... அதற்கு காரணம் நாம் ஆவலுடன் சண்டை போடணும் அதை பார்க்கும் மக்கள் அவளை காப்பாத்துங்க என அவள் நினைப்பதாக கூறுகிறார்.
மேலும் ஏற்கனவே நான் ஜூலி விஷயத்தில் கோபப்பட்டிருக்கிறேன், அதனால் எனக்கு தான் கெட்டபெயர். தற்போது மீண்டும் பரணி விஷயத்தில் நான் அவனை போகவிட்டுடேன் என கூறுகிறாள்... எனக்கு வரும் கோபத்திற்கு அவளை அறையனும் போல இருக்கு என்றும்... வெளியில வரட்டும் வச்சிருக்கேன் எல்லாருக்கும் அவர்கள் கால், கையை ஒடச்சி அனுப்புவேன் என கூறி சிரிக்கிறார்.
காயத்ரி தன்னை நல்லவர் என கூறி கொண்டு தொடர்ந்து இது போன்ற வில்லத்தனமான வேளைகளில் தான் ஈடுபட்டு வருகிறார்.
