பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், ஆரம்பமான நாளில் இருந்தே, பல்வேறு திருப்பங்களை கொண்டதாக உள்ளது. குறிப்பாக சரவணன் வெளியேற்றப்பட்டது, வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது, மற்றும் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவரை பிக்பாஸ் திடீர் என வெளியேற்றிய சம்பவங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.  மூன்றாவது சீசனில், இவருக்கு தான் ரசிகர்கள் முதல் ஆர்மியை துவங்கினர் என்கிற பெருமையும் இவருக்கே உண்டு. 

ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த லாஸ்லியா கடந்த சில தினங்களாக செய்து வரும் செயல், ரசிகர்களால் ஏற்று கொள்ளும் விதத்தில் இல்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம், லாஸ்லியாவை தாக்கி ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவில்,  நானும் கடந்த முன்று நாட்களாக பார்த்து வருகிறேன், ஒருவர் அழுவதற்கு கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அது முடியவில்லை. ஃபேக்காக இருக்கிறார். குறிப்பாக அழுவதற்கு முன்பே கையில் நாப்கின் வைத்திருக்கிறார் என தாக்கி பேசியுள்ளார்.

இவர் இப்படி ஒரு ட்விட் போட காரணம், அபிராமி வெளியேறும் போதும் லாஸ்லியா சத்தம்யிட்டு அழுதும் அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை. அதே போல் சேரன் இவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அழ முயற்சி செய்தார். அப்போதும் அவர் கண்ணில் இருந்து துளி கூட கண்ணீர் வரவில்லை. இதையெல்லாம் வைத்து தான், காயத்திரி இப்படி ஒரு ட்விட் போட்டுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.