டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து, இயக்குனர் பா.ரஞ்சித், நேற்றைய தினம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், மிகவும் உணச்சிவசத்தோடும், அச்சத்தோடும் ட்விட் செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆதரவை கொடுத்திருந்தனர்.

இந்த ட்விட்டரில்...  ‘குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளார். அரசு வன்முறையை கையில் எடுத்துள்ளது. எனவே தலைநகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, ஆளும் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது. இதே நிலை தமிழகத்திற்கும் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக’ கூறியிருந்தார்.

 

 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகையும், நடன இயக்குனர், மற்றும் பாஜக கட்சியின் பிரமுகருமான காயத்ரி ரகுராம், இயக்குனர் பா.ரஞ்சித்தை அசிங்கப்படுத்துவது போல் ட்விட் செய்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... ‘மதச்சார்பின்மை என்றால் என்ன? அது இந்துக்களுக்கும் மட்டும் தான் இருக்க வேண்டுமா? பாஜக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எந்த ஊழலும் இல்லை. உங்களை போன்ற பெரியாரின் கைக்கூலிகள் தான் தமிழகத்தில் இந்து மதத்தை அழித்து கொண்டிருக்கின்றீர்கள். அதேபோல் பாகிஸ்தான் கைக்கூலியான காங்கிரஸ் இந்தியாவை அழித்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளது.