gayathiri raguram sad life

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் "ரகுராம்", இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர்.

சினிமா துறையில் மிகவும் பிரபலமாக இருந்த போது அமெரிக்காவை சேந்த தொழிலதிபர் தீபக் சந்திரசேகர் என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு, திருமணமான ஒரே வாரத்தில் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை பண்ணுவதாக கூறி போலீசில் புகார் செய்து, அவரிடம் இருந்து விவகாரத்தை பெற்றார்.

இதை தொடர்ந்து இவர் தன்னுடைய வாழ்க்கையை பெற்றோர் வீட்டில் தான் கழித்துவந்தார். ஒரு சில காரணத்தால் கடந்த 5 மாதமாக தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வர அதை ஏற்றுக்கொண்டு மீதம் உள்ள 13 போட்டியாளர்களின் ஒருவராய் பிக் பாஸ் வீட்டில் அடைபட்டு கிடக்கிறார்.

ஆர்த்தியுடன் சேர்ந்து கொண்டு இவரும் ஜூலியை தாக்கி பேசி சர்ச்சையில் சிக்கினார். இதை தொடர்ந்து திடீர் என அவரது செயல்பாடுகளில் ஒரு சில மாற்றங்களை நாம் உணரவும் முடிகிறது.

தற்போது வாழ்க்கையில் ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமைபடுத்தப்படுவதாக கூறி விவாகரத்து பெற்ற இவர் சினிமா திரையுலகை சேர்த்த ஒருவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த காதலை பற்றி அவரே பிக் பாஸ் மேடையில் கூறி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.