gayathiri raguraam issue

உலகநாயகன் கமலஹாசன், முதல் முறையாக தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நேற்று இரவு முதல் முறையாக துவங்கப்பட்ட நிகழ்ச்சியில், 15 நடிகர் நடிகைகள் மற்றும் ஒரு சில வெளியுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், 100 நாட்கள் போன், நியூஸ் பேப்பர், டிவி என எந்த வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நடன இயக்குனரும், பாஜக பிரமுகருமான காயத்திரி ரகுராம்.

செல்போன் பயன்படுத்த முடியாது. இருப்பினும் எப்படி அவரது அக்கவுண்டிலிருந்து டிவிட் செய்யப்பட்டுள்ளது என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து செய்தி அனுப்பிவருவதால், இந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கண்துடைப்பு என கூறி கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள் இதனால் நிகழ்ச்சி ஆரமிக்கப்பட்ட முதல் நாளே சர்ச்சையில் சிக்கியுள்ளார் காயத்திரி.